Friday, April 16, 2021

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று (16.04.2021, வெள்ளிக்கிழமை) சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதேபோல் கொத்தமங்கலம் பகுதியிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தபோது வாடிமாநகர் பகுதியில் வசித்துவந்த உருமநாதன் என்பவரது வீட்டில் காற்றின் வேகத்தால் தென்னை மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது. தென்னைமரம் ஒடியும் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்த உருமநாதர் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்டோர் உடனே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் சந்தர்ப்பவசமாக உயிர் தப்பினர். அதன்பின் தென்னைமரம் சாய்ந்ததில் அந்த வீடு முற்றிலும் இடிந்து நாசமானது. இதனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் உருமநாதன் குடும்பத்தினர் தவித்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் உடனடியாக கொத்தமங்கலம் கிராமத்திற்கு வந்து இடிந்து சேதம் அடைந்த உருமநாதனின் வீட்டை பார்வையிட்டார்.பின்னர் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ மெய்யநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட உருமநாதனின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்யவும் வழிவகை செய்தார். தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது தொகுதி மக்களின் சுக துக்கங்கள் அனைத்திலும் உடனுக்குடன் பங்குகொண்டு மக்களில் ஒருவராய் இருந்து 2016ல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தாலும் இன்று விரைவில் ஆளும்கட்சியில் முக்கிய பதவிக்கு வரும் வாய்ப்பு இதனால்தான் கூடுகின்றது என்ற தொகுதியில் பரவலாக பேசப்படுகின்றது.


 

No comments:

Post a Comment