Friday, August 30, 2019

#மழை
காதலிப்பவனுக்கு கவிதையாய்
மாணவனுக்கு விடுமுறையாய்
நடப்பவனுக்கு சேறாய்
வாணிகனுக்கு வரியாய்
அதிகாரிக்கு குறையாய்
குடைக்காரனுக்கு தோழனாய்
தெரியும் நீ
விவசாயிக்கு மட்டும்
உயிராய் தெரிவதால்தான்
பலர் உயிரோடு
இன்னும் இப்புவியில் !

No comments:

Post a Comment